4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

By காமதேனு

தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.

சென்னை வானிலை மையம்

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வடதமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் இன்று தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் முதலான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மழை

வரும் 11-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமானது மற்றும் கனமழை பெய்யக்கூடும்.

நாளை வரை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும்?: திருமாவளவன் பரபரப்பு பேட்டி

சென்னையில் பரபரப்பு... வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைு!

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்... பொதுமக்கள் தவிப்பு!

ரூ.1 லட்சம் சன்மானம்... காணாமல் போன பூனையை போஸ்டர் ஒட்டி தேடும் வினோதம்

அதிகாலை துயரம்... இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE