இஸ்ரேலில் இருந்து மீட்கவேண்டும்... 18 தமிழர்கள் கோரிக்கை; அமைச்சர் மஸ்தான் தகவல்!

By காமதேனு

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து தங்களை மீட்குமாறு 18 தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழக சிறுபான்மையினர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதால் அங்கு வசித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப இந்திய அரசையும் மாநில அரசையும் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரியத்தின் மூலம் தமிழர்களை அங்கிருந்து மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் துணை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நல வாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதில் சென்னை ஆலந்துறை சேர்ந்த 15 பேரும், கோவையைச் சேர்ந்த 3 மாணவர்களும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை அமைச்சர் மஸ்தான்

18 பேரும் தற்போதைக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால் தமிழக அரசு அவர்களை பத்திரமாக அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE