புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சங்கரன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

By த.அசோக் குமார்

தென்காசி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலாளர் இசக்கித்துரை தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வேலாயுதம், ஏஐசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மாரியப்பன், கிட்டப்பா, வேலு, பரமசிவன், அந்தோணிராஜ், சிங்காரவேலு, சமுத்திரக்கனி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அப்போது, போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 3 புதிய குற்றவியல் சட்டங்களின் நகலை எரிக்க முயன்றனர். உடனடியாக அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE