காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம்... முதல்வர் ஸ்டாலின் திட்டம்!

By காமதேனு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா மற்றும் மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவரவுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி கூடும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் சட்டப்பேரவை கூடியதும், அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்றி கர்நாடகா தண்ணீரை திறக்கவேண்டும் என்றும், மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியும் இந்த தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE