கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இந்த மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ள தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் கடந்த மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் முதல் தவணை பணம் வரவு வைக்கப்பட்டது.
மாதாமாதம் 15ம் தேதியன்று பெண்களின் வங்கி கணக்கில் உரிமைத்தொகை செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த மாதம் உரிமைத் தொகை செலுத்தப்படும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்குப் பதிலாக பணம் எந்த நாளில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இதுகுறித்த அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டுள்ளது. 15ம் தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே அக் 14-ம் தேதி அன்று பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் மகிழ்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!