கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கை முதல்வர் பார்வையிட வேண்டும்: மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கோரிக்கை

By இல.ராஜகோபால்

கோவை: பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்க நாளை கோவை வரும் முதல்வர், வெள்ளலூர் குப்பைக் கிடங்கை பார்வையிட வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் குழுவினர் இன்று மனு ஒன்றை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், "கோவை வரும் முதல்வர் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான வெள்ளலூர் குப்பைக் கிடங்கை பார்வையிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது வரை தீர்வு காணப்பட வில்லை. கடந்த முறை முதல்வர் கோவை வந்தபோது இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம்.

அவசர வேலையாக வந்திருப்பதால் அப்போது முதல்வரால் வர இயலாது என அதிகாரிகள் கூறினார். இதனால் போராட்டத்தை கைவிட்டோம். இந்த முறையும் பார்வையிடவில்லை என்றால் அடுத்த முறை முதல்வர் கோவை வரும் போது கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்" என்று ஈஸ்வரன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE