தெலங்கானா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது. முதல்வராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். ஆட்சிக்கு வந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளை தொடங்கியது தெலங்கானா அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம், கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள் கல்வி (உதவித்தொகை) வழங்கப்படும் என பல திட்டங்கள் குறித்து அறிவித்திருந்தது.
அவற்றுள் முதற்கட்டமாக தெலங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் சொகுசு பேருந்துகள் தவிர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பல லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களை தேடுவோர் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர். பெரும்பாலானவர்கள் அனைவரும் பேருந்துகளிலேயே பயணிக்க தொடங்கி விட்டனர்.
இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அரசைக் கண்டித்து நேற்று பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி
அதிர்ச்சி... விமான விபத்தில் பிரபல நடிகர், 2 மகள்கள் உயிரிழப்பு
ஜனவரி 21-ல் திமுக இளைஞரணி மாநாடு... திமுக தலைமை அறிவிப்பு!
இன்னும் முடியாத மீட்பு பணி... ஜப்பான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது!
காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!