தொடர்மழை காரணமாக கன்னியாகுமரியில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும் கேரளாவின், தென்மேற்கு பருவமழை கிடைக்கும் பகுதி கன்னியாகுமரி.
எனவே, அங்கு தென்மேற்கு பருவமழை காலத்திலும், அதைத் தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக குமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி நேற்று குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றும் மாவட்டம் முழுவதும் மழை தொடர்கிறது.
எனவே பள்ளி குழுந்தைகளின் நலன்கருதி கனமழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.