பொய்ச் செய்திகள் எனும் நச்சுக் கிருமிகளை ஒழிப்போம் - அமைச்சர் உதயநிதியின் முக்கிய அறிவிப்பு! 

By KU BUREAU

சென்னை: சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வாட்ஸ் அப் சேனல் ஒன்றை கழக அரசின் ‘தகவல் சரிபார்ப்பகம்’ உருவாக்கியுள்ளது என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சமூக வலைதளங்களில் பொறுப்பில்லாமல் பரப்பப்படும் பொய்ச் செய்திகளால் மக்களிடையே பிளவும் வெறுப்பும் ஏற்படும் அபாயம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

தகவல்களின் உண்மைத் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமெனும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை - செய்திமக்கள் தொடர்புத்துறையின் கீழ் ’தகவல் சரிபார்ப்பகம்’ செயல்பட்டு வருகிறது.

ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உண்மைத் தகவல்களே ஊட்டச்சத்தாகும். எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வாட்ஸ் அப் சேனல் ஒன்றை கழக அரசின் ‘தகவல் சரிபார்ப்பகம்’ உருவாக்கியுள்ளது.

பொய்ச் செய்திகள் எனும் சமூக நச்சுக் கிருமிகளை அனைவரும் ஒன்றிணைந்து ஒழிக்க, கீழ்க்காணும் QR code-ஐ ஸ்கேன் செய்து, வாட்ஸ்அப் சேனலில் இணைவீர்’ என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE