பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் அதனை சரிசெய்யும் வேலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வந்துள்ள நிர்மலா சீதாராமனை அதிமுகவைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் சந்தித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
கோவை மாவட்ட அதிமுகவைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கண் அசைவுகள் இல்லாமல் எதுவும் நடைபெறாது. அந்தவகையில் வேலுமணி இல்லாமல் அதிமுகவைச் சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விழாவில் பங்கேற்றிருப்பது பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. இதுத் தொடர்பாக பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டப்போது, ‘’ அரசு நிகழ்ச்சி என்பதால் தலைமையின் ஒப்புதலோடுதான் பங்கேற்றோம். அண்ணன் வேலுமணி சென்னையில் இருப்பதால் அவர் வரவில்லை’’ என அழைப்பைத் துண்டித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
HBD Sathyaraj: ‘சிவாஜி’யின் நிறைவேறாத ஆசை... திரையில் வாழ்ந்து காட்டிய சத்யராஜ்!
அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை!
நாடு முழுவதும் அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு!
காமதேனு தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய இங்கே கிளிக் பண்ணுங்க...