உரிமைத் தொகை... நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்

By காமதேனு

நேற்று நடந்த கிராம சபை கூட்டங்களில் பல ஊர்களிலும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் திமுகவுக்கு எதிராக கொந்தளித்த சம்பவம் நடந்துள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணங்களால் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்டுள்ள பெண்கள் கோபத்திலும் விரக்தியிலும் உள்ளனர்.

அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் பலரின் விண்ணப்பங்களை ஏற்காத நிலையே இணையத்தில் தொடர்கிறது. உங்களது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்றே அந்த இணையதளம் கூறுகிறது. அதனால் பலரும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ சேவை மையங்களில் தொடர்ந்து காத்திருந்து முறையீடு செய்ய முயற்சித்து வருகின்றனர்.

கிராம சபை கூட்டம்

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் பல ஊர்களிலும் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவங்க தான் ஓட்டு போட்டாங்களா?, நாங்கள் எல்லாம் ஓட்டு போடலையா?, எங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன தரப் போகிறது என்று சரமாரியாக ஆளும் கட்சியினரை பார்த்து கேள்வி எழுப்பி உள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திமுகவுக்கு பெரிய சாதகமாக பார்க்கப்படும் நிலையில் அது கிடைக்காத பெண்கள் திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளதை நேற்றைய கிராம சபை கூட்டங்களில் காண முடிந்தது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

HBD Sathyaraj: ‘சிவாஜி’யின் நிறைவேறாத ஆசை... திரையில் வாழ்ந்து காட்டிய சத்யராஜ்!

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை!

நாடு முழுவதும் அதிர்ச்சி... அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு!

உஷார்... சூப்பர் மார்க்கெட்டில் ஃபிரிட்ஜை திறந்து சாக்லேட் எடுத்த சிறுமி... பரிதாபமாக உயிரைக்கும் போது விபரீதம்… மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE