அதிமுக குறித்து அவதூறு: சபாநாயகர் அப்பாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

By KU BUREAU

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் சேர தயாராக இருப்பதாக அவதூறு பரப்பியதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசிய கருத்துக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பாபு முருகவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக, சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை செப்டம்பர் 9-ம் தேதி எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE