வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார்: காஞ்சிபுரத்தில் அரசு பெண் அதிகாரி வீட்டில் சோதனை

By KU BUREAU

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் காஞ்சிபுரம் நகராட்சியின் முன்னாள் நகரமைப்பு ஆய்வாளர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது நகரமைப்பு ஆய்வாளராக இருந்தவர் சியாமளா. இவரது கணவர் சேகர் மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியாக மாறும்போது சியாமளா பணி மாறுதலில் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதிக்குச் சென்றார். பின்னர் பணி மாறுதல் பெற்று செய்யாறு நகராட்சியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சியாமளா மற்றும்அவரது கணவர் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.73 லட்சம்அளவில் சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான 6 அதிகாரிகள் காஞ்சிபுரம் மண்டித் தெரு அருகே உள்ள சியாமாளாவின் வீட்டுக்கு அதிகாலையில் வந்தனர். அவர்கள் சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினார்.

இந்த சோதனையில் அவர்களிடம் உள்ள ரொக்கம், வங்கி இருப்பு, வாங்கிய சொத்துகள் ஆகிய அனைத்து தகவல்களையும் சேகரித்தனர். இந்த சோதனையின் முடிவில் வீட்டில் இருந்த கணக்கில்வராத ரூ.1 லட்சத்து 39 ஆயிரம்ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.இவர்களது சொத்து ஆவணங்கள் பெரும்பாலும் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உரிய அனுமதி பெற்று வங்கிலாக்கரில் உள்ள ஆவணங்களைஎடுக்கவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார்திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாகதொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE