நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகையிலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக். 14-ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ஆனால், பயணிகளிடையே போதிய வரவேற்பின்மை, கனமழை உள்ளிட்ட காரணங்களால் அதே மாதம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், பல்வேறு காரணங்களால் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படவே இல்லை.

இந்நிலையில், அடுத்த வாரம் முதல் நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவன இயக்குநர் நிரஞ்சன் அறிவித்துள்ளார். இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை கப்பல் சென்னை வழியாக நேற்று மாலை நாகை துறைமுகம் வந்து சேர்ந்தது. கப்பல் சேவை தொடங்க உள்ளதன் முன்னோட்டமாக நாளை (ஆக.8) சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE