மேலப்பாளையம் விரிவாக்க பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் அவதி

By KU BUREAU

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையத்திலுள்ள விரிவாக்க பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வடியாமல் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அவ்வாறு தேங்கியிருக்கும் தண்ணீரை உடனுக்குடன் வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கும் நிலையில் விரிவாக்க பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கியிருக்கும் மழைநீரால் மக்கள் அவதியுறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலப்பாளையம் ராஜாநகர் 4- வது தெருவில் உள்ள சாக்கடை கழிவுநீர் மழைநீரூடன் கலந்து வந்து மேலப்பாளையம் பிரைட் காலணியை சுற்றி குளம் போல் பெருகியிருக்கிறது. தண்ணீர் போகவழியின்றி துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதிகளில் குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE