திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
திருப்பூர் தெற்கு வட்டம் அலகுமலை அழகாபுரி அம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட 16.84 ஏக்கர் மற்றும் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இரு வேறு இடங்களில் மொத்தமாக 4.71 ஏக்கர் என மொத்தம், 21.59 ஏக்கர் நிலம் உள்ளது.
இதனிடையே, திருப்பூர் இணை ஆணையர் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் துணை ஆணையர் ஹர்ஷினி தலைமையில், திருப்பூர் தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) ரவீந்திரன், கோயில் செயல் அலுவலர் சரவணபவன் ஆகியோர் முன்னிலையில் இன்று கோயில்களுக்கு சொந்தமான 21.59 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மொத்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.