மதுரையில் தொடரும் கோடை மழை: வீடுகளில் புகுந்த கழிவு நீர்

By KU BUREAU

மதுரை: மதுரையில் நேற்று மீண்டும் பரவலாக கனமழை பெய்தது. நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீருடன் கழிவு நீரும் புகுந்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் முற்றிலும் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நகரில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நேற்று பிற்பகலில் மாநகர் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை விட்டு விட்டு பெய்தது. நகரில் தாழ்வான பகுதியில் உள்ள சாலைகள், சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்கு வரத்து நிறுத்தப்பட்டது.

அவனியாபுரம் இமானுவேல் நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழை நீருடன் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். இதனால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது. கோடை மழை அடை மழையாக பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கி உள்ளது. வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE