திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி: திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு

By KU BUREAU

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், உட்கட்சிப் பிரச்சினையால் திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும், மேயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.

திமுக அமைச்சர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் மேயர் பதவியை சரவணன் ராஜினாமா செய்தார். நெல்லை மேயர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. 25-வது வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் என்ற கிட்டு (58) மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று நெல்லை வந்து, திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, மேயர் வேட்பாளர் அறிவிப்பு வெளியானது.ராமகிருஷ்ணன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE