தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

By KU BUREAU

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருவார்ரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக நெய்வேலியில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் காஞ்சிபுரம் ஹிந்துஸ்தான் பல்கலை கழகத்தில் 10 செ.மீ, சென்னை எண்ணூர் துறைமுகம் 8 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 8 செ.மீ, அண்ணா பல்கலை 8 செ.மீ, அரியலூர் 5 செ.மீ, சத்தியபாமா பல்கலை பகுதியில் 5 செ.மீ, வில்லிவாக்கத்தில் 5 செ.மீ, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் 5 செ.மீ, பெரம்பலூரில் 4 செ.மீ, நுங்கம்பாக்கம் 4 செ.மீ, மீனம்பாக்கம் 4 செ.மீ, செங்கல்பட்டு 3 செ.மீ, விருதாச்சலம் 3 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு 10 செ.மீ மழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே, சென்னையில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மழை தொடர்ந்து பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE