மலையிட பகுதிகளில் மனைகளை வரன்முறை செய்ய இறுதி வாய்ப்பு @ தென்காசி

By த.அசோக் குமார்

தென்காசி: தென்காசியில் மலையிடப் பகுதிகளில் உள்ள மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்காக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மலையிடப் பகுதியில் 20அக்டோபர் 2016 அல்லது அதற்கு முன்பாக பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவசாகம் 30, நவம்பர் 2024 வரை நீட்டித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யலாம். இதுவரை மலையிட பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இது இறுதி வாய்ப்பு என்பதல் பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE