குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இல்லாததால் காவிரிபாசன மாவட்டங்களுக்கு குறுவைத் தொகுப்புத்திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர்வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவு: காவிரி பாசன மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். அதனால், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.

தென்மேற்கு பருவமழை: அந்தமான் நிகோபர் தீவுகளில் தென்மேற்கு பருவமழைதொடங்கியுள்ளது. காவிரியின்நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள கேரளத்திலும், கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை ஜூலை இறுதியில்தான் தீவிரமடையும். எனவே, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதாக இருந்தாலும் அதுஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் சாத்தியமாகும்.

அப்படியானால், குறுவைசாகுபடி செய்ய திட்டமிட்டிருக்கும் விவசாயி களுக்கு மாற்றுவழி என்ன என்பதை தமிழகஅரசு காட்ட வேண்டும். ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு முன் குறுவை சாகுபடி செய்யப்பட்டால்தான் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக அறுவடை செய்ய முடியும். தாமதமாக குறுவை நடவு செய்யப்பட்டால் குறுவை பயிர்கள்வடகிழக்குப் பருவமழையில்சிக்கி சேதமாகும் ஆபத்துள் ளது. மேற்கண்ட அனைத்து காரணிகளை பார்க்கும்போது நிலத்தடி நீரைப் பயன்படுத்திகுறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, நடவடிக் கையாக இருக்கும்.

பயிர்கள் பாதிப்பு: காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டில் போதிய தண்ணீர் கிடைக்காததால் குறுவை,சம்பா, தாளடி ஆகியமூன்றுபோக பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. நடப்பாண்டிலாவது குறுவைசாகுபடி வெற்றிகரமாக செய்யப்பட்டால் தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பில் இருந்து விவசாயிகள் ஓரளவாவது மீண்டுவர முடியும்.

இதைக் கருத்தில் கொண்டுகுறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாகஅறிவிக்க வேண்டும். மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படுவதை யும் உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE