விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுகவில் வார்டு வாரியாக உறுப்பினர் அட்டை வழங்கும் பணி தொடங்கியது. விழுப்புரம் நகரில் இரு இடங்களில் உறுப்பினர் அட்டைகளை மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் வழங்கினார்.
அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கைப் பணி ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, விழுப்புரம் நகரில் மாதாகோவில் அருகிலுள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று, புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதுபோல, விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியிலும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
அப்போது நகர கழகச் செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, உறுப்பினர் அட்டை வழங்கல் பொறுப்பாளர் அற்புதவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
» கொடைக்கானல்: 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்
» மகளை ஒருதலையாக காதலித்தவரை கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!