சென்னை: தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், கடந்த ஜூலை 7-ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, இரு பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.வி.தமி்ழ் செல்வி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நாகூர் காவல் நிலையத்தில் 4 வாரங்களுக்கு சனிக்கிழமை தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், எதிர்காலத்தில் இதுபோல செய்யமாட்டேன் என உத்தரவாத தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி முன்ஜாமீன் வழங்கினார்.