மத்திய அரசை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாலை மறியல்

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி, முன்னாள் எம்எல்ஏ உட்பட மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன் தலைமையில் சிபிஐ கட்சியினர் ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர். நேதாஜி சாலையில் மணிக்கூண்டு அருகே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்ததை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவித்ததை கண்டித்தும், மத்திய பாஜக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களில் எழுப்பினர். இதனையடுத்து முன்னாள் எம்.பி, முன்னாள் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE