புறக்கணிக்கப்பட்ட தமிழகம்: மத்திய பட்ஜெட்டை கண்டித்து திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து, பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான நிதி நிலை அறிக்கையை அறிவித்திருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் மணிக்கூண்டு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு மா.கம்யூ., மாநிலக்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஏ.பி.மணிகண்டன், சிபிஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர் பி.சுப்புராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE