‘தெரியாம வந்துட்டேன்; ஆளை விடுங்க..’ -வளைத்த செய்தியாளர்களை சமாளித்த வானதி சீனிவாசன்!

By காமதேனு

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி இழப்பை கண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். அதே கருப்பில் சேலை அணிந்து வந்ததில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கருப்பு உடையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி இழப்புக்கு ஆளானதை கண்டிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைக்குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து ராகுல் காந்தியை ஆதரித்தும், பாஜக மற்றும் பிரதமர் மோடியை கண்டிக்கும் வகையில் பதாகைகள் ஏந்தியும் வந்தனர். பதாகைகளுக்கு பேரவையில் அனுமதி இல்லை என சபாநாயகர் ஆட்சேபித்ததில், அவற்றை வெளியே வைத்துவிட்டு பேரவைக்கு வந்தனர்.

இந்த நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு நிறப்புடவை அணிந்து வந்ததால் பேரவை வளாகத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 'தான் எதேச்சையாகவே கருப்பு புடவை கட்டி வந்ததாக’ வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார். ஆனபோதும், செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் விடவில்லை. ராகுல் காந்திக்கு ‘ஆதரவாக’ பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் கருப்பு ஆடையில் வந்த தருணத்தை, தங்களது கேமாராக்களில் வளைத்து வளைத்து பதிவு செய்த பிறகே விலகினர். அப்படி வளைத்த புகைப்படக்காரர்களை ”தெரியாம வந்துட்டேன்; ஆளை விடுங்க” என்று சிரித்தபடி சமாளித்து எஸ்கேப் ஆனார் வானதி சீனிவாசன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE