அதிமுக பொதுச்செயலாளர் பதவி: ஈபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல்

By கரு.முத்து

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் எதிர்வரும் 26>ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு அதிகாரம் மிக்க பதவிக்கு, தான் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி விருப்பமாக இருந்தது. அதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக் குழுக்கூட்டத்தில் அதற்கான வேலைகளைத் துவங்கினார்.

கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு அதிகாரம் மிக்க பதவிக்கு, தான் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி விருப்பமாக இருந்தது. அதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக் குழுக்கூட்டத்தில் அதற்கான வேலைகளை துவங்கினார்.

அன்றைய தினம் கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவரிடம் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை சி.வி.சண்முகம் வழங்கினார். இதனை ஏற்று 2022 ஜூலை 11-ல் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஜுலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி யில் இருந் து நீக்கப்பட்டனர்.

இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்த நிலையில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்பதாக தீர்ப்பு வந்தது.

எனினும் தற்போது மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை அதிமுக நடத்துகிறது.

இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். 26-ம் தேதி நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் விருப்பப்படி அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதும், அதன் பின்னர் அது தொடர்பான சட்ட அங்கீகாரங்கள் பெறப்படுவதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கட்சியின் சட்ட திட்டங்களின் படி அடிப்படை உறுப்பினர்களால் அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதால் அதற்கான சட்ட பாதுகாப்பு உறுதியாகிவிடும்.

போலீஸில் பாதுகாப்பு கேட்டு மனு

பாதுகாப்பு கேட்டு மனு

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு கேட்டு அதிமுக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 18 தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது., இந்நிலையில் கழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் கழகத்திற்கு எதிரானவர்கள் ,சமூக விரோதிகள் மற்றும் குண்டர்களால் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, மார்ச் 18 முதல் 27-ம் தேதி தேதி வரை காவல்துறையினர் தலைமை கழகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE