மன வேதனையில் மணிசங்கர் அய்யர்!

By காமதேனு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மறக்க முடியாத மனிதர் மணிசங்கர் அய்யர். மூன்று முறை எம்பி-யாக இருந்த மணிசங்கர் அய்யர் வாரம் தவறாமல் தொகுதிக்குள் சுற்றிவந்து மக்கள் குறைகளை கேட்பார்.

அப்படிப்பட்ட மனிதருக்கு கடந்த 2014, 2019 தேர்தல்களில் காங்கிரஸ் தலைமை சீட் தரவில்லை. தலைமையுடனான உறவில் சுமூகம் இல்லாத காரணத்தால் அய்யர் ஓரங்கட்டப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. தற்போது தலைமையுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மணிசங்கர் அய்யர் இந்த முறை எப்படியும் மயிலாடுதுறையில் நின்று மீண்டும் எம்பி ஆகிவிட வேண்டும் என நினைக்கிறாராம். ஆனால், இப்போது இந்தத் தொகுதி திமுக வசம் இருக்கிறது. இதை இழக்க விரும்பாத கழக உடன்பிறப்புகள், மணிசங்கருக்கு உதவியாளராக இருந்து தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் ராஜ்குமாரை தூண்டிவிடுகிறார்களாம்.

சீர்காழி நிகழ்ச்சியில் மணிசங்கர் அய்யர்

அய்யரை விட திமுக தயவே தற்போது தனக்கு தேவை என்பதால் குருவின் பேச்சை ராஜ்குமார் கேட்பதில்லையாம். அண்மையில் சீர்காழி நிகழ்சிக்கு வந்த மணிசங்கர் அய்யருக்கு ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். வளர்த்த கடா மார்பில் பாய்வதை வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் வெம்பிப் போயிருக்கிறாராம் அய்யர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE