ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆறுதல்!

By காமதேனு

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 24-ம் தேதி காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும், இறுதிச்சடங்களில் முதல்வர் சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார்.

அமைச்சர் சேகர்பாபு, பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ்பாண்டியன்

இந்த நிலையில், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, ஓபிஎஸ்ஸின் குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். மேலும், அமைச்சர் சேகர்பாபு, பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE