தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்துபாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ள நீர், வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்குச் செல்ல இருப்பதால், நிலத்தை சமப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள கன்னி வாய்க்கால்எனப்படும் கத்திரிகுழி வாய்க்காலை, அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகளே சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர். அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்வது வரை காத்திருக்காமல், நீர் வந்தால் உடனடியாக பயன்படுத்தும் நோக்கில் கடந்த 2 நாட்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கள்ளபெரம் பூரைச் சேர்ந்த விவசாயி ராஜ.குமாரவேல் கூறியது:
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர், ஒரு வாரத்தில் எங்களது பகுதியை வந்து சேரும். வெண்ணாறு பாசனம் மூலம் நாங்கள்சாகுபடி செய்து வருகிறோம்.எங்களது ஊரில் உள்ள சி, டி பிரிவுவாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருந்தன. இந்த வாய்க்கால்களை தூர்வாரினால்தான் வயல்களுக்கு விரைவாக நீர் பாயும்.
எனவே, வாய்க்கால்களை அரசு தூர்வாரும் என காத்திருக்காமல், நாங்களே ஒன்றிணைந்து, சொந்த செலவில் கடந்த 2 நாட்களாக ஒருகிலோ மீட்டர் நீளத்துக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரியுள்ளோம். இன்னும் 2 நாட் களில் தூர்வாரும் பணி நிறை வடைந்துவிடும். இதன்மூலம் இந்தப் பகுதியில் உள்ள 20-க்கும் அதிகமான ஏக்கர் நிலங்களுக்கு உரிய நேரத்தில் நீர் பாயும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்