வதந்தி பரப்பி தலைமறைவான பாஜக நிர்வாகி: டெல்லி விரைந்த தமிழக போலீஸ்

By காமதேனு

வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை கைது செய்ய ஏழு பேர் கொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்த தனிப்படை போலீஸார் டெல்லி சென்றுள்ளனர்.

பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த பாஜகவின் உத்தரப் பிரதேச செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், “ இந்தியில் பேசியதற்காக பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்த 12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்” என்று அவர் ட்விட் செய்திருந்தார். வதந்தி பரப்பும் வகையில் பதிவு செய்யப்பட்ட இது ட்விட் நீக்கப்பட்டது.

இதையடுத்து மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகையை ஏற்படுத்தியதாக பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ், மத்தியபாகம் ஆய்வாளர் ஐயப்பன், உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் ஆகியோர் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய தனிப்படை போலீஸார் டெல்லி சென்றடைந்தனர். அங்கு தலைமறைவாகியுள்ள பிரசாந்த் உம்ராவை டெல்லி போலீஸார் உதவியுடன் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE