விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய ஓட்டுநர்- காவல் நிலையத்தை முற்றுகையிட்ட காரைக்குடி கிராம மக்கள்

By இ.ஜெகநாதன்

காரைக்குடி: காரைக்குடி அருகே விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரை கைது செய்யாததை கண்டித்து காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

காரைக்குடி அருகே சாக்கோட்டை செங்காத்தான்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகேசன் (39). இவர் நேற்றிரவு வேலை முடிந்து ஆலமங்கலம் பகுதியில் இருந்து செங்காத்தான்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரை கைது செய்யாததை கண்டித்து இன்று சாக்கோட்டை காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் டிஎஸ்பி-யான பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஓட்டுநரை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE