எழும்பூர் யார்டில் பணி: விரைவு, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

By KU BUREAU

சென்னை: சென்னை எழும்பூர் யார்டில் கால்வாய் கட்டும் பணி நடைபெறவுள்ளதால், விரைவு ரயில்கள், மின்சார ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:

விரைவு ரயில்கள்: மதுரை - ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு இன்று அதிகாலை 12.55 மணிக்கு புறப்படும் சம்பர்க் கிராந்திவிரைவு ரயில் (12651), செங்கல்பட்டு, மேல்பாக்கம், அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக திருப்பி விடப்படும். இந்தரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். எனவே, தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் வராது.

செங்கல்பட்டு - காச்சிகூடா வுக்கு இன்று பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (17651), எழும்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப் படாது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும்.

செங்கல்பட்டு - காக்கிநாடாவுக்கு இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் சர்கார் விரைவு ரயில் (17643),எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது. அதேநேரத்தில், கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும். இது தவிர, 3 விரைவு ரயில்கள்சேவையில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.

மின்சார ரயில்கள்: சென்னை கடற்கரை - செங்கல் பட்டு மார்க்கத்தில், இன்று காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை வழக்கமான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கு மாற்றாக, சென்னை எழும்பூரில் இருந்து பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக் கப்படும். அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 8 மணி முதல் இரவு 7.35 மணிவரை வெவ்வேறு நேரங்களில் 31 பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.40, 11.05, 11.30. 11.59 ஆகிய நேரங்களில் பாசஞ்சர் ரயில்கள் புறப்படும்.

இந்த ரயில்கள் பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களை சென்றடையும். மறு மார்க்கமாக, வெவ்வேறு இடங்களில் இருந்து ரயில்கள் புறப்பட்டு சென்னை எழும்பூர், கடற்கரையை வந்தடையும்.

இது தவிர, திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து சில பாசஞ்சர் ரயில்கள் புறப்பட்டு, கூடுவாஞ்சேரியை அடையும். கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டுக்கு சில பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னைரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE