சென்னையில் 14 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் - கடற்கரை யார்டில் பொறியியல் பணி

By KU BUREAU

சென்னை: சென்னை கடற்கரை யார்டில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, 14 மின்சார ரயில் சேவையில் இன்று (ஜூலை 28) மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "சென்னை கடற்கரை - ஆவடிக்கு இன்று (ஜூலை 28) காலை 10.25, 10.35, முற்பகல் 11.05 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், அதே நாளில் மதியம் 2.45 மணிக்கு ஆவடி - கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 4 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

திருத்தணி - கடற்கரைக்கு இன்று காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வியாசர்பாடி ஜீவா - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் சென்ட்ரலுக்கு திருப்பிவிடப்படும்.

திருவள்ளூர் - கடற்கரைக்கு இன்று காலை 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வியாசர்பாடி ஜீவா - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் சென்ட்ரல் நிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.

கடம்பத்தூர் - கடற்கரைக்கு இன்று நண்பகல் 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வியாசர்பாடி ஜீவா - கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் சென்ட்ரல் நிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.

கடற்கரை - திருத்தணிக்கு இன்று நண்பகல் 12.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில்சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.

கடற்கரை - திருவள்ளூருக்கு இன்று மதியம் 1.05 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் இன்று மதியம் 1.10மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-க்கு இன்று மதியம் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை - வியாசர்பாடி ஜீவா இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும்.

கடற்கரை - அரக்கோணத்துக்கு இன்று மதியம் 2.25 மணிக்கு புறப்பட வேண்டியமின்சார ரயில், கடற்கரை - ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் ஆவடியில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதுதவிர, மேலும் 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது."இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE