மத்திய பட்ஜெட்டுக்கு கண்டனம்: காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

By KU BUREAU

காஞ்சிபுரம்: மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம், காவலன் கேட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வி.முனுசாமி தலைமை தாங்கினார். இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினமும் 4 மணி நேரம் மட்டுமே வேலை அளிப்பதுடன் முழு ஊதியம் ரூ.319 வழங்க வேண்டும், நியாய விலைக் கடைகளில் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE