முதுகில் புத்தகப்பை, பள்ளிச்சீருடையில் வந்த திமுக எம்எல்ஏக்கள்: புதுவையில் பரபரப்பு

By காமதேனு

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் இன்று பள்ளிச்சீருடை அணிந்து புத்தகப்பையுடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக எம்எல்ஏக்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், காரைக்கால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் அறிவித்தபடி இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவை வழங்கப் படாததை கண்டித்தும், இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நூதன முறையில் அவைக்கு வந்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தனர்

பள்ளிச் சீருடை அணிந்திருந்த அவர்கள், புத்தகப் பையை முதுகில் போட்டுக் கொண்டு பள்ளி மாணவர்களைப் போல மிதிவண்டிகளில் மிஷன் வீதியில் இருந்து புறப்பட்டு புதுச்சேரி சட்டபேரவைக்கு வந்தனர். அதே உடையுடன் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சென்ற அவர்கள், மாணவர்களுக்கு சீருடை கள், மிதிவேண்டி, லேப்டாப் ஆகியவற்றை வழங்காத புதுச்சேரி அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE