தமிழகத்தில் பிறந்தவர் மூலம் துரோகம் இழைத்த மத்திய அரசு: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காட்டம்

By இ.ஜெகநாதன்

காரைக்குடி: தமிழகத்தில் பிறந்தவர் மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக பட்ஜெட் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விமரித்துள்ளார்.

இது தொடர்பாக காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு மிகக் குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் வரை கல்விக் கடன் கொடுக்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்கள் ஏற்படத்தான் செய்யும். கடந்த 3 ஆண்டுகளில் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்பியுள்ளோம்.” என்றார்.

மேலும், “தமிழகத்தில் பிறந்தவர் மூலம் (நிதியமைச்சர் நிர்லமா சீதாராமன்) தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. மேலும் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வராதது மத்திய அரசின் மாற்றான்தாய் மனப்பான்மையை காட்டுகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE