மாற்றுத்திறனாளிகளை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவையில் போராட்டம்

By இல.ராஜகோபால்

கோவை: மாற்றுத்திறனாளிகளை (காது கேளாதோர்) புண்படுத்தும் வகையில், கேலி செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட ரோகன் கரியப்பா, சயான் பட்டாச்சார்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு காது கேளாதோர் - வாய் பேசாதோர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

வீடியோவில் சைகை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பொழுதுபோக்கு என்ற போர்வையில் புண்படுத்தும் சைகைகளை செய்வதாகவும், தகாத மொழியை பயன்படுத்துவதாகவும், அந்த செயல் காது கேளாதோரை மிகவும் அவமதிக்கும் செயலாகும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த வீடியோ, ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம்‌ மற்றும் இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு ஆகியவற்றை மீறி உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், கேலி செய்தவர்களின் புகைப்படங்களை தரையில் வைத்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE