மதுரையில் 5 மாவட்ட செயலர்களை நியமிக்க அதிமுக திட்டம் - யாருக்கு பின்னடைவு?

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

மதுரை: மதுரை வருவாய் மாவட்ட அதிமுகவை நிர்வாக ரீதியாக 5 மாவட்டங்களாகப் பிரிக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாக நிர் வாகிகள் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக 3 மாவட்டங்களாகச் செயல்படுகிறது. மதுரை மாநகர் மாவட்டச் செய லாளராக செல்லூர் கே.ராஜூ, புறநகரில் மேலூர், மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய கிழக்கு மாவட்டச் செயலாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய மேற்கு மாவட்டச் செய லாளராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செயல்படு கின்றனர்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 5 தொகுதிகளில் வென்றது. அதன்பின்னர் நடந்த தேர்தலில் குறிப்பிடும்படியான வெற்றியைப் பெறவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் மதுரை மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்ற மதுரை, விருதுநகர், தேனி என 3 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

இது குறித்து பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. இக்கூட்டத் தில் நடந்த ஆலோசனைகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: தேனியில் அதிமுக வாக்குகள் குறைந்ததற்கு முக்கிய காரணம் டிடிவி.தினகரன் போட்டியிட்டதே. ஆனால், மதுரையில் எந்தக் காரணமும் இல்லாத சூழலிலும் பாஜகவை விட அதிமுக பின் தங்கி யது கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணங்கள், நிர்வாகிகள் தேர் தல் பணி குறித்து வேட்பாளர் பா.சரவணன் விளக்கம் அளித்தார்.

மாநகரில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1.20 லட்சம் வாக்குகள் குறைந்த நிலையில், புறநகரிலுள்ள 2 தொகுதிகளில் மட்டும் 1.05 லட்சம் வாக்குகள் குறைந்ததால் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது. திருமங்கலம் தொகுதியில் திமுக கூட்டணி யைவிட 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றதற்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

புறநகரில் வாக்குகள் குறைந்ததை சரி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜன்செல்லப்பா விளக்கம் அளித்தார். மாநகரில் வாக்குகள் குறைந்ததற்கான பல்வேறு காரணங்களை தெரிவித்த செல்லூர் ராஜூ, இதற்காக கட்சித் தலைமை எடுக்கும் நடவடிக்கையை ஏற் பதாக தெரிவித்தார்.

இந்தச் சூழலில் மாவட்டத்தை 5 ஆக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு இதற்கான உத்தரவு வெளி யாகும். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மேலூர், மதுரை கிழக்கு ஒரு மாவட்டம், மதுரை மத்தி, மேற்கு ஒரு மாவட்டம், மதுரை தெற்கு, வடக்கு ஒரு மாவட்டம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஒரு மாவட்டம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஒரு மாவட்டம் என 5 ஆக பிரிக்கப்படும். இதன்மூலம் செல்லூர் ராஜூ 2 தொகுதிகளையும், உதயகுமார், ராஜன்செல்லப்பா தலா ஒரு தொகுதி யையும் இழப்பர். அனைவரும் ஏற்கும் வகையில் இந்த மாற்றம் இருக்கும்.

மதுரை மாநகரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பா.சரவணன், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ. மகேந்திரன் ஆகியோருக்கு புதிய மாவட்டச் செயலாளர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளது. 5 மாவட்டங்களாக பிரிக்கும்போதே, வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் வரை முடிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பின்னர் இளை ஞர்கள் பலரை கட்சிக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிர் வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE