உதயநிதி ஸ்டாலின் உட்பட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு - 2026 தேர்தலுக்காக திமுக அறிவிப்பு!

By KU BUREAU

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்துள்ளது திமுக.

இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ளவேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கழக தலைவருக்கும் - தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘ஒருங்கிணைப்புக்குழு’ பின்வருமாறு அமைக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்புக்குழுவில், அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE