வருவாய்த் துறை செயலர் அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு

By KU BUREAU

சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்த பி.அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘வருவாய்த்துறை செயலர் பி.அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் இதர திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE