காரைக்குடியில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர் கலந்த மழைநீர்

By KU BUREAU

காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழை யால் வீடுகளுக்குள் கழிவுநீருடன் கலந்த தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் சிரமமடைந்தனர்.

காரைக்குடி, கோவிலூர், அரியக்குடி, பள்ளத்தூர், கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 28-வது வார்டு கப்பலோட்டிய தமிழன் தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அப்பகுதி மக்கள் பாத்திரங்கள் மூலம் தண்ணீரை இறைத்து ஊற்றி வெளியேற்றனர்.

இதனால் மக்கள் சிரமமடைந்தனர். தங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி அமைக்க வேண்டுமென கவுன்சிலர் பிரகாஷ் கோரிக்கை விடுத் தார். மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கால்பிரிவு, கல்குறிச்சி, மூங்கில் ஊரணி, கீழ்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் சிவகங்கை சுற்றுப்பகுதிகளிலும் மழை பெய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE