சென்னை: பிரபல யூடியூபர் இர்பான், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ஆஷிபாவுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளார். இதில் ஆஷிபா அணிந்திருந்த நகைகள் பலரையும் கவர்ந்துள்ளது.
யூடியூபில் 'இர்பான் வியூவ்ஸ்' என்ற பெயரில் உணவு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு கவனம் பெற்றவர் இர்பான். இவர் யூடியூப் மட்டுமின்றி எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக வலைதளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசனிலும் பங்கேற்று வருகிறார்.
யூடியூபர் இர்பான் கடந்த ஆண்டு மே மாதம் ஆசிபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், துபாய் சென்றிருந்த போது, அங்கு தனது மனைவி வயிற்றில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொண்டார். பின்னர், இந்தியா வந்த அவர், இது தொடர்பாகவே வீடியோ ஒன்றையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்து தெரிந்துக் கொண்டு வெளியில் சொல்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழி வகை உள்ளது. அதன்படி அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளத்திலிருந்து நீக்கிய இர்பான், தனது செயலுக்கு மன்னிப்பும் கோரினார். இதைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது.
» வங்கதேசத்திற்கு சுரங்கம் அமைத்து சிலை கடத்தல்; முக்கிய நபரை கைது செய்த போலீஸார்!
» நாடாளுமன்ற கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தம்
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ஆசிபாவுக்கு, இர்பான் சமீபத்தில் வளைகாப்பு நடத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை இர்பான் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஆசிபா அணிந்திருந்க்கும் நகைகள் பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் வளைகாப்பு விழா நடத்திய இர்பான் தம்பதிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.