சென்னை - நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - நெல்லை இடையே இன்றுசிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்ட்ரலில் இருந்து இன்று (ஜூலை 19) இரவு 11.20 மணிக்கு ரயில் (06183) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு நெல்லை செல்லும்.

இந்த ரயிலில் 16 தூங்கும் வசதி கொண்டபெட்டிகள்,2 இரண்டாம் வகுப்பு லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE