தினகரனின் சம்பந்தி பாஜகவில் இணைகிறாரா?

By காமதேனு

தஞ்சையில் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் டிகேவி என அழைக்கப்படும் து.கிருஷ்ணசாமி வாண்டையார். இவரின் தந்தை துளசி அய்யா வாண்டையார் காங்கிரஸ் எம்பி-யாக இருந்தவர். தற்போது கிருஷ்ணசாமி வாண்டையார் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் டிடிவி தினகரனின் சம்பந்தி என்பது கூடுதல் தகவல். இந்த சூழலில், வரும் ஜனவரி மாதம் டிகேவி பாஜகவில் இணையப் போவதாக நேற்று சமூக வலைதளங்களில் திடீரென தீபோல தகவல் பரவியது. இதையடுத்து காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு உருவானது.

எங்கிருந்து இந்தப் புகை கிளம்பியது எனத் தெரியவில்லை. ஆனால் இந்த தகவலைக் கேள்விப்பட்டதுமே பதறிய டிகேவி, “நான் பாஜகவில் இணைவதாக பரவும் செய்தியை பலமுறை மறுத்துள்ளேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என விளக்கமளித்தார். ஆனாலும் தஞ்சை பக்கம் சலசலப்பு ஓயவில்லை. பாஜகவுடன் தினகரன் அனுசரணையாகப் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரது சம்பந்தி பாஜகவில் சேரப் போவதாக வரும் செய்திகளை பல்வேறு கோணங்களில் அலசிக் கொண்டிருக்கிறது தஞ்சை அரசியல் வட்டாரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE