காமராஜர் 122-வது பிறந்த நாள்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் மரியாதை

By KU BUREAU

சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா வழக்கமான உற்சாகத்துடன் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள காமராஜர் நினைவிடம், தி.நகரில் உள்ள நினைவு இல்லம்,சென்னை பல்லவன் இல்லம் எதிரே ஜிம்கானா கிளப் முன்பு உள்ள காமராஜரின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மற்றும் ராமச்சந்திரா பப்ளிக் ஸ்கூல் சார்பில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் ஜார்க்கண்ட், தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர், கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் காமராஜரின் உருப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் தனது வலைதளப் பதிவில், கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன். மங்காப் புகழ் கொண்ட அவரது வாழ்வையும் தொண்டையும் கல்வி வளர்ச்சி நாளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பயிற்றுவிப்போம் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் சென்னை பல்லவன் இல்லம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அமைச்சர்கள் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர்பிரியா, எம்எல்ஏக்கள் த.வேலு, ஏ.எம்.வி. பிரபாகரராஜா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரதுஇல்லத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் பல்லவன் இல்லம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. நா.பாலகங்கா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பல்லவன் இல்லம் எதிரே உள்ள காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசைசவுந்தரராஜன், துணைத் தலைவர்கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பல்லவன் இல்லம் எதிரே சிலைக்குமாலை அணிவித்தனர்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரதுபடத்துக்கு மரியாதை செலுத்தினார். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், தி.நகர் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE