பல்லாவரம்: தமிழறிஞர் மறைமலை அடிகளா ரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தில் உள்ளசிலைக்கு மரியாதை செலுத்தப் பட்டது.
பல்லாவரம் சாவடி தெருவில், தமிழறிஞர் மறைமலை அடிகளார் வாழ்ந்த இல்லம் உள்ளது. இந்நிலையில், அவரது 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, இல்லத்தில் உள்ள, அவரது சிலைக்கு, அமைச்சர் அன்பரசன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா,செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், துணை இயக்குநர் பாரதி உள்ளிட்டோர், நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார், அவரின் பேத்தி கலைச்செல்வி, மறைமலையடிகள் பேரன் மறை. தாயுமானவன். மறைமலையடிகள் கலைமன்ற பொறுப்பாளரும், சைவ சித்தாந்த சங்க செயலாளருமான சுப்பையா முத்துக்குமாரசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
» இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 29 பேருக்கு ஜூலை 29-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு