2022-23-ம் நிதி ஆண்டில் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு ரூ.13,811 கோடி இழப்பு

By KU BUREAU

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.13,811 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவு தொடர்பான உத்தேச விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். ஆணையம் அதை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கும். ஒப்புதல் அளித்ததைவிட அதிக செலவு ஏற்பட்டால், அதற்கான அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

அந்த வகையில், கடந்த 2022-23நிதி ஆண்டில் மின்கட்டணம் மூலமாக ரூ.60,505 கோடி, மானியம் நிலுவையாக ரூ.1,776 கோடி, இதர வருவாய் ரூ.5,398 கோடி, தமிழக அரசின் மானியம் ரூ.12,688 கோடி என மொத்தம் ரூ.80,367 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

செலவுகளை பொருத்தவரை, அதிகபட்சமாக மின்கொள்முதல் மற்றும் வழித்தடத்துக்கு ரூ.51,460 கோடி செலவிடப்பட்டுள்ளது. மின்னுற்பத்திக்கு ரூ.22,407 கோடி, கடனுக்கான வட்டி ரூ.6,359 கோடி, இயக்கம், பராமரிப்புக்கு ரூ.10,701 கோடி என மொத்தம் ரூ.94,178 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

வரவைவிட செலவு அதிகம் இருப்பதால் மின்வாரியத்துக்கு ரூ.13,811 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE