போலி தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம்: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

By சி.கண்ணன்

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் பெயரில் போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி ) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தேசிய மருத்துவ ஆணைய மருத்துவர் பி.என்.கங்காதர் எனக் கூறிக் கொண்டு 7050392639 என்ற செல்போன் எண்ணில் இருந்து மர்ம நபர் ஒருவர் பலரிடம் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த எண் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவருக்கு சொந்தமானது இல்லை.

எனவே, இதுபோன்ற அழைப்புகளை பொதுமக்களும், மருத்துவத் துறையினரும் நம்ப வேண்டாம். அதேபோல், அத்தகைய போலி நபருடன் உரையாடுவதை தவிர்க்கவும். தேசிய மருத்துவ ஆணையம் பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE