மதுரை: மதுரை - ராஜாஜி பூங்கா அருகே பிரபல பொழுதுபோக்கு கிளப் ஒன்று நீண்ட நாட்களாக செயல்படுகிறது. இங்கு மதுரையைச் சேர்ந்த விஐபி உட்பட முக்கிய நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவ்வப்போது, சில பொழுதுபோக்கு நிகழ்வு முறையான அனுமதியுடன் நடப்பது வழக்கம் என, கூறப்படுகிறது. இந்நிலையில், இக்கிளப்பிற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் வருவதாக மதுரை நகர மதுவிலக்கு போலீஸாருக்கு ஒருவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாநகர மது விலக்கு போலீஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட கிளப் வளாகத்துகு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளனர்.
» சிங்கப்பெருமாள் கோவில் மேம்பால பணியை விரைந்து முடித்திட சிபிஎம் வலியுறுத்தல்
» சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது
மதுவிலக்கு போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘புகாரின் அடிப்படையில் அந்த கிளப்பிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அந்த புகாரில் உண்மை தன்மை இல்லை என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புகார் அளித்த நபருக்கு போன் செய்த போது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என தெரிந்தது. அவரை பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.